மேலதிக கட்டணங்களை அறவிட்டால் அபராதம் !!
திருத்தப்பட்ட பஸ் கட்டணங்களுக்கு மேலதிகமாக கட்டணங்களை அறவிடும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய, இவ்வாறு அதிக கட்டணங்களை அறவிடும் பஸ்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பஸ்களை அடையாளம் காண நடமாடும் பரிசோதனை அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அதிக கட்டணங்களை அறவிடும் சில பஸ்களின் உரிமையாளர்களுக்கு எதிராக அபாரதம் விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், பயணிகளிடம் அறவிடும் மேலதிக பணத்தை மீள செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.