கொழும்பு காலி முகத்திடல் நுழைவாயில் அருகே பீரங்கியின் பிரதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.!!
கொழும்பு காலி முகத்திடல் நுழைவாயில் அருகே பீரங்கியின் பிரதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
அதற்காக அண்மையில் தொல்லியல் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்கவுக்கும் அருகிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் நிர்வாக அதிகாரிக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
முன்னதாக, ஹோட்டல் பணியிடத்தில் ஒரு பெரிய பீரங்கி கண்டுபிடிக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்து பீரங்கி பின்னர் திருகோணமலை தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த இடத்தில் பீரங்கியின் பிரதி நிர்மாணிக்கப்படவுள்ளதாக தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.