முக்கிய புலம்பெயர் குழுக்களுக்கான தடை நீக்கப்பட்டது.!!
புலம்பெயர்ந்த தமிழ் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் சிலவற்றை அரசாங்கம் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.
பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட செல்வாக்குமிக்க புலம்பெயர் குழுவான குளோபல் தமிழ் மன்றமும், பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகியனவும் அடங்கும்.
பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அசாதாரண வர்த்தமானி மூலம் பட்டியல் நீக்கம் மேற்கொள்ளப்பட்டது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கமும் பின்னர் கோட்டாபய ராஜபக்ச நிர்வாகமும் தமிழ் குழுக்களை தடை செய்திருந்தது.
மேலும், சில புலம்பெயர் குழுக்களின் மீதான தடையை ‘யஹபாலனய’ அரசாங்கம் நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.