எரிபொருள் நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை -காஞ்சன விஜயசேகர!!
QR குறியீடு உட்பட நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று (13) கொலன்னாவ பெற்றோலிய விநியோக முனையத்தில் எரிபொருள் விநியோகம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைகள், பொது போக்குவரத்து, மீன்பிடி, விவசாயத் தேவைகள்,இ கைத்தொழில் மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கான எரிபொருளை விடுவிப்பது தொடர்பிலும் அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.