காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி!!
பொலன்னறுவை அரலகங்வில பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (12) உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்றிரவு தனது தோட்டத்தை கண்காணித்துக் கொண்டிருந்த போது காட்டு யானைகளால் தாக்கப்பட்டார்.
உயிரிழந்தவர் ருஹுனுகம பிரதேசத்தில் வசிக்கும் 61 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாதுரு ஓயா வனப்பகுதியில் இருந்து வரும் காட்டு யானைகள் தொடர்ந்தும் பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இப்பகுதியில் காட்டு யானை தாக்கி இந்த ஆண்டில் பலியான மூன்றாவது சம்பவம் இதுவாகும்.