100 சதவீத பஸ்கள் சேவையில் ஈடுபடும் !!
நாளைய தினம் நாடுபூராகவும் 100 சதவீதமான பஸ்கள் சேவையில் ஈடுபடும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளை தொடக்கம் 5 நாட்களுக்கும் பாடசாலைகளை நடத்த திட்டமிட்டுள்ளதால், தனியார் பஸ் போக்குவரத்து சேவைகளை வழமைக்கு கொண்டு வர முடியுமென தமது சங்கம் நம்புவதாகவும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, நாளை 12000க்கும் அதிகமான பஸ்கள் சேவையில் ஈடுபடும் என்றார்.