;
Athirady Tamil News

காண வேண்டாமோ…. இரு கண்ணிருக்கும் போதே விண்ணுயர் கோபுரம் காண வேண்டாமோ….!!

0

நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள குபேர திக்கு குமார வாசல் ஸ்ரீ குமார கோபுரத்தின் கலசாபிஷேகம் எதிர்வரும் 19 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை – கார்த்திகை மஹோற்சவத்தன்று காலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் பக்த அடியார்களுக்கான அறிவித்தலொன்றை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன் முழுமையான விபரம் வருமாறு :

கந்தப் பெருமான் மெய்யடியார்களே!

கார்த்திகைத் திருவிழாவன்று காலை 6 மணி முதல் சொர்ண வர்ண கலாபன பஞ்சதள அதிகம்பீர மகோன்னத குமார மகாராஜ கோபுர கலாசாபிஷேகம் நடைபெற கந்தப் பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.

கந்தப்பெருமான் எழுந்தருளி, உள்வீதி உலா வந்து குமார வாசலைத் திறந்ததும், கும்பாபிஷேகம் நடைபெற்று குமாரவெளியில் திருநடனம் புரிவார்.

இந்தக் கிடைத்தற்கரிய காட்சியைக் காணவிரும்பும் பக்தர்கள் – அடியவர்கள் அனைவரும் வைரவப் பெருமான் வாசல் வழியாக பழைய வாகனசாலை பாதையில் சென்று குமார வெளிப் பூந்தோட்டத்தினை அடைந்து அங்கேயே கந்தன் வரக் காத்திருங்கள். பாதை சிறியதாக இருப்பதனால், அடியவர்கள் தயவுசெய்து முன்னதாகவே குமாரவெளியை அடைந்து கந்தன் வரக் காத்திருங்கள்.

எல்லோரும் இனபுற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல், வேறொன்றறியேன் பராபரமே!

“மேன்மைகொள் சைவ நீதி : விளங்குக உலகமெல்லாம்”
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.