இவ்வார இறுதியில் விடுதலை!!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொதுமன்னிப்பின் கீழ் இவ்வார இறுதியில் விடுதலை செய்யப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவை சிறைச்சாலைக்கு சென்று இன்று (16) மயந்த திஸாநாயக்க பார்வையிட்டார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்வாரம் ரஞ்சன் ராமநாயக்க பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படலாம். எந்தவிதமான நிபந்தனைகளுமின்றி ரஞ்சன் விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லை என்றால், 11 வருடங்களுக்கு ரஞ்சனால் அரசியலில் ஈடுபட முடியாது. ஐவருக்கு மேலதிகமாக எவரையும் சந்திக்க முடியாத நிலையும் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.