வட்டி வீத அதிகரிப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்!!
நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீத அதிகரிப்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களின் தற்போதுள்ள மட்டத்தை அதிகரிக்காமல் அல்லது மாற்றியமைக்காமல் பேண தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
மாற்றியமைக்காது பேண தீர்மானம்
இதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களை (SLFR) முறையே 14.50 வீதம் மற்றும் 15.50 வீதமாக தற்போதைய மட்டத்தில் மாற்றியமைக்காமல் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.