தமிழ் கிராமங்களில் செயற்படும் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களுக்கு அழைப்பு!!
அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதேச பிரிவுகளில் மற்றும் தமிழ் கிராமங்களில் செயற்ப்படும் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களை அம்பாறை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வரையறுக்கப்பட்ட கல்முனை அம்பாரை மாவட்ட சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின் சமாசதில் அங்கத்தவர்களாக இணையுமாறு சமாசத்தின் தலைவர் எஸ் .லோகநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு சமாசம் தேவையென 1987ம் ஆண்டு கொடிய யுத்த சூழ்நிலையிலும் தமது உயிரை கூட துச்சமாக மதித்து பல இனவாத அச்சுறுத்தல் மத்தியிலும் இஸ்தாபக தலைவர் காலம் சென்ற திரு.பி.சண்முகம் ஐயா மற்றும் பல தியாகிகளின் கடின உளைப்பினால் இச் சமாசம் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே மத்திய அரசாங்கத்தினால் கல்முனை மாவட்ட சமாசம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தும் வடக்கு கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் திரு.சி.பற்குணம் ஐயா அவர்களினால் தனிப்பட்ட அயராத முயற்சி காரணமாக 1992ம் ஆண்டு எமது சமாசம் பதிவு செய்யபட்டுள்ளது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட சமாசம் இடைகாலங்களில் இருந்த நிர்வாகிகளின் அசமந்த போக்கு காரணமாக நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் இச் சமாசமானது மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இருந்தும் 2019ம் ஆண்டு எனது தலைமையில் இருக்கும் இயக்குனர் சபையின் நிர்வாகிகள் மற்றும் உத்தியோகதர்களினதும் ஒத்துழைப்புடன் இச் சமாசத்தை சிறப்பாக இயக்கி வருகிறோம். இதேவேளை 2020ம் ஆண்டு சமாசம் இலாபத்தையும் பெற்றுள்ளோம்.
மேலும் தற்பொழுது நெதர்லாந்து நாட்டின் மனிதநேய கூட்டுறவுசங்கம் தலைவர்இசெயலாளர்இபொருளாளர் மற்றும் நிர்வாதினரது ஒத்துழைப்பும் அனுசரனையுடனும் விவசாய ஊக்குவிப்பு விவசாய கடன் 5 ஆண்டு திட்டத்திற்கு அமைவாக ரூபா 4இ000இ000 நாவிதன்வெளி பிரதேச ஐந்து சங்கங்களுக்கு அதன் உறுப்பினர் 100 பேருக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சமாசத்தின் நிர்வாக செலவுகளுக்கும் ரூபா 3இ50இ000 அன்பளிப்பு செய்துள்ளனர் என்பதையும் அறியத்தருகின்றோம்.
2021 – 2022ம் ஆண்டுக்கான எனது தலைமையில் தெரிவுசெய்யப்பட்ட புதிய இயக்குனர் சபை சிறப்பாகவும் தியாக அற்ப்பணிப்புடன் அம்பாறை மாவட்டத்தில் பின் தங்கிய தமிழ் கிராமங்களையும் அங்கு வாழுகின்ற தமிழ் மக்களின் கல்வி சுகாதாரம் கலாசாரம் அபிவிருத்தி போன்றவற்றை 2022ம் ஆண்டில் நடைமுறைபடுத்திட சமாசம் உறுதி கொண்டுளோம்.
எனவே அம்பாறை மாவட்டத்தில் சகல தமிழ் கிராமங்களில் உள்ள சிக்கன கடனுதவும் கூட்டுறவு சங்கங்களும் எமது சமாசத்தில் அங்கத்தவர்களாக தமிழ் மக்களின் எதிர்கால முன்னேற்றம் கருதி இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என அச்செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”