பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் வசமிருந்து கஞ்சா மீட்பு!!
பொலிஸாரினால் கைதான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் வசமிருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வழக்குகளின் அடிப்படையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபரை பிடிப்பதற்காக அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலால் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்த நிலையில் 18.08.2022 அன்று வியாழக்கிழமை கைதானார்.
இதன் போது நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த மருதமுனை வி.சி வீதியை சேர்ந்த 43 வயதான சந்தேக நபர் கைதானதுடன் வசம் 1200 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”