தோட்ட மக்கள் மீது பெரும்பான்மை இனத்தினர் தாக்குதல் !!
தொழில் நிமித்தம் பலாங்கொடையில் இருந்து பொகவந்தலாவைக்கு செல்லும் போது பொகவந்தலாவையை சேர்ந்த இளைஞர், யுவதிகள் பெரும்பான்மையினரால் தாக்கப்பட்டதுடன், அவர்கள் தன்னை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் அருகிலிருந்த தோட்ட குடியிருப்புகளுக்கு சென்றுள்ளனர்.
அச்சமயத்தில் பெரும்பான்மையினத்தவரால் அத்தோட்ட குடியிருப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து உடனடியாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொடர்பு கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இச்சம்பவத்துடன் தொடர்புடைய உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தோட்ட மக்கள் பின்னவல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு அறிவித்தனர். அதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக இரத்தினபுரி மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செந்தில் தொண்டமான் வலியுறுத்தினார்.
அவ்வாறு அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிடின் பலாங்கொடை பகுதியில் உள்ள அனைத்து தோட்டங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கடுமையான எச்சரிக்கையை செந்தில் தொண்டமான் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அம்மாவட்டத்திற்கு பொறுப்பான இ.தொ.காவின் அரசியல் ஒருங்கிணைப்பாளர் ரூபன் பெருமாளை சம்பவ இடத்திற்கு சென்று அம்மக்களுக்கான நீதியை பெற்றுத்தர தேவையான நடவடிக்கைகளை எடுக்க பணிப்புரை விடுத்தார்.