கேரளாவில் 17 வயது சிறுமி கற்பழிப்பு- கடற்படை வீரர் கைது..!!
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம், பெக்ரோரை சேர்ந்தவர் ஹன்ஸ்ராஜ் (வயது 26). கடற்படை வீரர். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படை தளத்தில் பணியாற்றி வருகிறார். இதற்காக கொச்சி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து மனைவியுடன் தங்கி இருக்கிறார். இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக சொந்த ஊருக்கு சென்றார். அப்போது ஹன்ஸ்ராஜூக்கு அருகில் வசித்து வந்த 17 வயது சிறுமி வீட்டு வேலைகளில் உதவி செய்து வந்தார். வீட்டில் தனியாக இருக்கும் போது அந்த சிறுமிக்கு ஹன்ஸ்ராஜ் பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் அவர் கர்ப்பம் ஆனார். சிறுமியின் உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு அவரிடம் பெற்றோர் விசாரித்த போதுதான், ஹன்ஸ்ராஜ் அவரை கற்பழித்ததும், இதனால் சிறுமி கர்ப்பிணி ஆனதும் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கடற்படை வீரர் ஹன்ஸ்ராஜ் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.