கொடிகாமம் நோக்கி பேருந்தில் பயணித்த மூதாட்டி உயிரிழப்பு!!
யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தில் கொடிகாம சந்தைக்கு தேங்காய் கொள்வனவு செய்ய சென்ற மூதாட்டி திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த செபநாயகம் செல்வமலர் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த மூதாட்டி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு பேருந்துக்குள் மயங்கி சரிந்துள்ளார்.
அதனை அடுத்து சாரதி பேருந்தில் மூதாட்டியை சாவகச்சேரி வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதிலும் , மூதாட்டி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
அதையடுத்து மூதாட்டியின் உடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”