கோட்டா செய்ததையே செய்யுங்கள்: ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை !!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கும் போது, அவர்களுக்கான நிறுவனங்கள் மற்றும் நோக்கங்களை வர்த்தமானியில் வெளியிட்டதைப் போல, வெளியிட்டு நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி செயலகத்தில் கடந்த வாரம் சந்தித்து, இது தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.
அவ்வாறு செய்தால், அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் ஏற்படக்கூடிய முரண்பாடுகள் பெருமளவில் குறைக்கப்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து குறிப்பிட்ட பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது
30 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றியதன் பின்னர் அந்த நியமனங்கள் வழங்கப்படும் எனவும் அறியமுடிகிறது.