யாழில் உள்ள பிரபல விடுதியில் தீ – கனடா நாட்டவரின் உடைமைகள் தீயில் எரிந்து நாசம்!!!
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் , விடுதி அறையில் தங்கியிருந்த கனடா நாட்டினை சேர்ந்தவர்களின் உடைமைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
குறித்த விடுதியில் இவர்கள் தங்கி இருந்த விடுதி அறையில் பொருத்தப்பட்டு இருந்த குளிரூட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த விடுதி அறையில் தீ விபத்து ஏற்பட்ட போது விடுதி பணியாளர்கள் விரைந்து செயற்பட்டமையால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்னர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”