;
Athirady Tamil News

ரெயில் பயணத்தின் போது வாட்ஸ்அப்-இல் உணவு ஆர்டர் செய்யலாம் – ஐஆர்சிடிசி அதிரடி..!!

0

இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் உணவு டெலிவரி சேவையான சூப் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஹாப்டிக் உடன் இணைந்து ரெயில்களில் வாட்ஸ்அப் மூலம் ஆன்லைன் உணவு டெலிவரி சேவையை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம். இதற்கு எந்த விதமான கூடுதல் செயலியையும் டவுன்லோட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பயணத்தின் போது பயணிகள் சாட்பாட் மூலம் உணவு ஆர்டர் செய்தால், ரெயிலில் அமர்ந்து இருக்கும் இருக்கைக்கே ஆர்டர் செய்த உணவு வந்து சேரும். பயணிகள் தங்களின் பிஎன்ஆர் நம்பரை பதிவிட்டு, உணவை முன்பதிவு செய்யலாம். அதன் பின் ஆர்டர் செய்த உணவின் நிலை குறித்து ரியல்-டைம் டிராக்கிங் செய்யலாம். இது குறித்து ஹாப்டிக் சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஐஆர்சிடிசி-இன் சூப் ஹாப்டிக் உடன் இணைந்து ரெயிலில் வாட்ஸ்அப் மூலம் உணவு டெலிவரி சேவையை அறிமுகம் செய்கிறது. இந்த பிளாட்பார்ம் மூலம், ரெயில் பயணத்தின் போது பயணிகள் உணவு ஆர்டர் செய்து சாப்பிடலாம். இதற்கு வாட்ஸ்அப் சாட்பாட் “சிவா” உடன் இணைய +91 7042062070 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். பின் தங்களின் பிஎன்ஆர் எண்ணை பதிவிட்டு உணவு ஆர்டர் செய்யலாம். சாட்பாட் உங்களின் பயண விவரங்களை உறுதிப்படுத்திக் கொண்டு உணவு எந்த ரெயில் நிலையத்தில் டெலிவரி செய்யப்பட வேண்டும் என கேட்கும். இதன் பின் ஆர்டர் செய்த உணவுக்கு ஆன்லைன் மூலமாகவோ அல்லது ரொக்கம் மூலமாகவோ பணம் செலுத்த முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.