செயற்பாட்டு அரசியலில் குதித்தார் மஹிந்த!!
முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ செயற்பாட்டு அரசியலுக்குள் மீண்டும் இறங்கியுள்ளார்.
மே.9 ஆம் திகதியன்று பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து, எவ்விதமான அரசியல் செயற்பாடுகளிலும் அவர் இறங்கவில்லை.
இந்நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை கொழும்பில் இன்று (31) சந்தித்து, கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை கொழும்பில் நேற்று (29) சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.