விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து..!!
விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், விநயாகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஞானம் என்பது முக்தியை விரும்புபவருக்கு அறியாமையை அழிக்கிறது. செல்வம் பக்தனுக்குத் திருப்தி அளிக்கிறது. அதனால், ஞானத்தையும், செல்வத்தையும் அளிக்கும் விநாயகரை அனைவரும் வணங்குவோம். யாரிடமிருந்து தடைகள் அழிகிறதோ, யாரிடமிருந்து காரியம் நிறைவேறுகிறதோ, அந்த விநாயகரை நாம் எப்போதும் கும்பிட்டு வணங்குவோம். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.