ஜம்மு காஷ்மீர் விபத்தில் 8 பேர் பலி- பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு..!!
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது. இதில் கார் முழுமையாக சேதமடைந்தது. பண்டா பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காரில் இருந்த சிறுமி உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில், பிரதமர் மோடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், நிவாரணமும் அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கிஷ்த்வாரில் நடந்த விபத்தால் வருத்தம் அடைகிறேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-ம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.