மூன்று மாதங்களில் 15 கொலைகள்!!
இந்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரையான மூன்று மாதங்களில் காலி மாவட்டத்தில் 15 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவற்றில் 12 கொலைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதுடன், ஏழு கொலைகள் அம்பலாங்கொட பிரதேசத்திலும், மற்ற மூன்றும் கூரிய ஆயுதங்களால் செய்யப்பட்ட கொலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.