;
Athirady Tamil News

ரூ. 25 லட்சம் கொடுக்கும் கூகுள் – இதை மட்டும் செய்தால் போதும்..!!

0

கூகுள் நிறுவனம் தனது சேவைகளில் உள்ள பிழைகளை கண்டறிய புது திட்டம் ஒன்றை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆய்வாளர்களுக்கு அதிகபட்சம் 31 ஆயிரத்து 337 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 25 லட்சம் வரையிலான சன்மானம் வழங்கப்பட இருக்கிறது.

சன்மான தொகை ஆய்வாளர்கள் கண்டறியும் பிழை, அதன் குறிக்கோள் என பல்வேறு அடிப்படைகளில் கணக்கிடப்படுகிறது. சன்மான தொகை 100 டாலர்களில் துவங்கி அதிகபட்சமாக 31 ஆயிரத்து 337 டாலர்கள் வரை வழங்கப்பட இருக்கிறது. அதிகபட்ச சன்மானம் வழக்கமில்லாத அல்லது வித்தியாசமான பிழைகளுக்கே வழங்கப்படுகிறது. சன்மானம் வழங்கும் புது திட்டம் Open Source Software Vulnerability Rewards Programme என அழைக்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ஓபன் சோர்ஸ் மென்பொருள்களை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் விளங்குகிறது. கூகுளின் கோலங், ஆங்குலர் மற்றும் ஃபுகிசியா போன்ற திட்டங்கள் மிக முக்கியமானவை ஆகும். கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் தனது ஓபன் சோர்ஸ் வினியோகத்தின் மீதான தாக்குதல்கள் 650 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக அறிவித்துள்ளது.

சொந்தமாக பிழை கண்டறியும் திட்டத்தை அறிவித்து இருப்பதன் மூலம் ஆய்வாளர்கள், ஓபன் சோர்ஸ் திட்டத்தை பாதிக்கும் பிழையை கண்டறிவதற்கு ஏற்ப தகுதியான தொகையை சன்மானமாக பெற்றுக் கொள்ளலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.