156ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் விசேட நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கடந்த கால யுத்தம் உள்ளிட்ட இதர காரணங்களினால் மரணமடைந்த பொலிஸாரின் குடும்பங்களுக்கு உலருணவு வழங்கும் செயற்பாடுகள் இன்று(3) கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றதுடன் இவ்வுலருணவு பொருட்களை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி உள்ளிட்டோர் இணைந்து வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் 1990 ஆம் ஆண்டு கடத்திக் கொல்லப்பட்ட பொலிஸார் உட்பட யுத்தத்தினால் உயிர்நீத்த சாய்ந்தமருதைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்கள் கெளரவிக்கப்பட்டுஇ உலருனவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த உலருணவு பொருட்களில் அரிசி சீனி தேயிலை பால் மா உள்ளிட்ட பொருட்கள் உள்ளடங்குவதுடன் பொலிஸாருக்கான விழிப்புணர்வு நிகழ்வும் நடைபெற்றன.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”