;
Athirady Tamil News

பொலிஸாருக்கு ஜனாதிபதி புகழாரம்!!

0

பொலிஸ் மற்றும் சுயாதீன நீதிமன்றம் இன்றி சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்த இரண்டு நிறுவனங்களைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே தொடர்ந்தும் முன்நோக்கிப் பயணிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

156 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இன்று (03) பிற்பகல் பொலிஸ் மேலதிக படைத்தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் உறுதிசெய்யப்படுதல் அவசியம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின், அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும். அன்று போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தைக் கைப்பற்றியிருந்தால், நாட்டின் ஜனநாயகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும். அத்துடன், சட்டத்தின் ஆட்சியும் மீறப்பட்டிருக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இச்சந்தர்ப்பத்தில் சட்டத்தின் ஆட்சியையும் அரசியலமைப்பையும் பொலிஸாரே பாதுகாத்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து பொலிசாருக்கும் இதற்கான கௌரவத்தை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.