நலன்புரி மானியம் பெறுவோருக்கு QR!!
நலன்புரி மானியங்களுக்கு தகுதியான நபர்களுக்கு கியூஆர் (QR) குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி.விஜயரத்ன தெரிவித்தார்.
இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சமுர்த்தி, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோய் உதவி, போன்ற நலன்புரி திட்டங்களின் கீழ் தற்போது நன்மைகளைப் பெறும் தனிநபர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பவுள்ளது.
மேலும், மானியத்துக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள நபர்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நபர்களையும் இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுமார் 3.9 மில்லியன் குடும்பங்கள் இத்திட்டத்துக்கு விண்ணப்பிப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்த சபையின் தலைவர், இந்த வேலைத்திட்டம் 06 ஆரம்ப கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.