3 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டன!!
மேல் கொத்மலை ,லக்ஸபான மற்றும் கெனியன் ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று காலை தொடக்கம் திறக்கப்பட்டுள்ளன.
நேற்று (5) பிற்பகல் தொடக்கம் பெய்து வரும் கடும் மழை காரணமாக, குறித்த மூன்று நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்று காலை முதல் திறக்கப்பட்டன என, நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய லக்ஸபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும், கெனியன் நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவும், மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது பெய்து வரும் மழையினால் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கெனியன், லக்ஸபான, புதிய லக்ஸபான, பொல்பிட்டிய, விமலசுரேந்திர ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் நீர்மின் நிலைய பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.