பொலிஸ் தின கிரிக்கட் சுற்றுப் போட்டி : சம்பியன் பட்டத்தை பெற்றது சாய்ந்தமருது விளாஸ்டர் அணி !!
156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற சினேகபூர்வ கிரிக்கட் சுற்றுப் போட்டியில் நற்பிட்டிமுனை RTR அணியை வீழ்த்தி சாய்ந்தமருது விளாஸ்டர் அணி வெற்றியடைந்தது சாம்பியன் கிண்ணத்தை சுவிகரித்தது.
156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சினேக பூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி கல்முனைஉவெஸ்லி தேசிய பாடசாலை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை இடம்பெற்றது.
அரையிறுதி போட்டியில் ஒரு ஓவரில் பொலிஸ் அணியை தோற்கடித்து அதிரடி காட்டிய சாய்ந்தமருது விளாஸ்டர் அணி இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயித்த 10 ஓவர்கள் முடிவில் 80 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு 81 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நற்பிட்டிமுனை RTR அணி 49 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தனர். இப்போட்டியின் சிறந்த வீரராக விளாஸ்டர் அணியின் நஜாத் தேர்வானதுடன், தொடராட்டக்காரராக அதே அணியின் அஸ்கான் தெரிவுசெய்யப்பட்டார். விளாஸ்டர் அணியை பல போட்டிகளில் வழிநடத்தி பல கிண்ணங்களை வெல்ல காரணமாக இருந்த விளாஸ்டர் விளையாட்டுக்கழக அணித்தலைவர் இஷ்ரத் இத்தொடரின் சிறந்த அணித்தலைவராக தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இச்சுற்றுப்போட்டியில் பொலிஸ் மேலதிகாரிகள், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், விளையாட்டுக்கழக நிர்வாகிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.