விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டம்!!
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று(06) ஆரம்பித்துள்ளனர்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 2019,2020 ஆகிய காலப்பகுதிகளின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களே மேற்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
விடுதலை புலிகள் மீளுருவாக்கம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பூநகரி முக்கொம்பன் பகுதியில் கைது செய்யப்பட் உ.உமாகாந்தன், ர.சயந்தன், வி.இன்பராஜ், மகேந்திரன் பார்த்தீபன் மற்றத வடமராட்சி தாளைடியை சேர்ந்த செ.உதயசிவம் உட்பட 12 பேர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்
தம்மை வழக்கில் இருந்து விடுதலை செய்யவேண்டும் அல்லது பிணையிலாவது விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சிறைச்சாலை நிர்வாகத்திடம் கடிதம் மூலம் அறிவித்து தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.