யாழ்ப்பாணம் பலாலி வீதியில் கந்தர்மடம் பகுதியில் விபத்தில் உயிரிழப்பு!!
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் கந்தர்மடம் பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
கிருஷ்ணகுமார் சரவணபவன் (வயது 30) என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
யாழ். நகர் பகுதியில் இருந்து திருநெல்வேலி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவரே கந்தர்மடம் பகுதி அருகே உள்ள மரத்துடன் மோதுண்டு மயக்கமுற்ற நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்தார்.