;
Athirady Tamil News

டெல்லியில் நேதாஜி சிலை அருகே பிரமாண்ட டிரோன் கண்காட்சி..!!

0

டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 28 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். சிலை திறப்பையொட்டி நேதாஜியின் வாழ்க்கை குறித்த டிரோன் கண்காட்சி இந்தியா கேட் பகுதியில் நேற்று முதல் 11-ந்தேதி வரை நடத்தப்படுகிறது.

அதன்படி நேற்று இரவு 8 மணிக்கு பிரமாண்ட டிரோன் கண்காட்சி நடந்தது. நேதாஜியின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக வானத்தில் டிரோன்கள் பறந்து ஒளிர செய்தன. இதில் நேதாஜியின் உருவப்படம் மற்றும் நேதாஜியின் பிரமாண்ட சிலை, ஜெய்ஹிந்த் உள்ளிட்ட 8 வெவ்வேறு வடிவங்களை டிரோன்களால் வானில் ஒளிபரப்பப்பட்டது. மொத்தம் 250 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சியை மக்கள் தங்களது செல்போன்களில் ஆர்வமுடன் படம் பிடித்தனர். நாட்டுப்புற மற்றும் பழங்குடி கலைஞர்கள் பங்கேற்ற கலாச்சார நிகழ்ச்சியும் நடந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.