மறுசீரமைப்பு குறித்து உலக வங்கியுடன் பேச்சு!!
இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் மறுசீரமைப்பு வேலைத் திட்டத்துக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதியுதவிகளைப் பெறுவதற்கு உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள் மற்றும் வலுச்சக்தி துறையின் தேவைகள் குறித்து உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் மின்சார அமைச்சில் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.