யாழில். போதைபொருள் பாவித்த சகோதரனால் வன்புணர்வுக்குள்ளான சகோதரி உயிர் மாய்ப்பு!!
யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவன் போதைப்பொருளை பாவித்த பின்னர் தனது சகோதரியை வன்புணர்வுக்கு உள்படுத்தியதனால், சகோதரி மனவிரக்திக்கு உள்ளாகி உயரை மாய்த்துள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 20 வயதுடைய இளம் பெண்ணே உயிரை மாய்த்துள்ளார்.
அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் தனது சகோதரியை வன்புணர்வுக்கு உள்படுத்தியுள்ளார். அதனால் விரக்தியடைந்த சகோதரி குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார்
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் உள்ளிட்ட உயிர்க்கொல்லி போதைப்பொருள் பாவனை இளவயதினர் இடையே அதிகரித்துள்ளதனால் பல்வேறு சமூகப் பிறழ்வு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதுடன் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.