இந்தியாவுக்கு காங்கோ உள்பட ஐந்து நாடுகளின் தூதர்கள் நியமனம்- குடியரசுத் தலைவர் ஏற்பு..!!
இந்தியாவுக்கான சிரியா அரபு குடியரசு தூதராக டாக்டர் பாசாம் அல்கத்தீப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் செக் குடியரசு தூதராக டாக்டர் எலிஸ்கா சிக்கோவா நியமனம் செய்யப்பட்டார்.
காங்கோ குடியரசின் தூதராக ரெயிமண்ட் செர்ஜி பாலேவும், நவ்ரு நாட்டின் துணைத் தூதராக மார்லன் இனம்வின் மோசஸ் நியமினம் செய்யப்பட்டார்.
இந்தியாவுக்கான சவுதி அரேபியா றாட்டின் தூதராக சாலிஹ் ஈத் அல் –ஹூசைனி நியமிக்கப்பட்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான ஐந்து நாடுகளின் தூதர்கள் தங்களது நியமன பத்திரங்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முர்முவிடம் வழங்கினர். அவற்றை அவர் ஏற்றுக் கொண்டார்.