பதில் நிதியமைச்சர் நியமனம்!!
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவுக்கு சென்றதையடுத்து, பதில் நிதியமைச்சராக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்துக்கு அவர் பிரவேசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.