மாதாந்த உணவுக்கு இவ்வளவு தேவை!!
இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று, வீட்டில் சத்தான உணவை உட்கொள்வதற்கு மாதாந்தம் 75,000 ரூபாய் முதல் 90,000 வரை தேவைப்படுவதாக ஒரு புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் நிபுணத்துவ மருத்துவர்கள் சங்கத்தினால், தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய, நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 2,500 ரூபாய் தேவைப்படுவதாக தெரியவந்துள்ளது.