கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா-காங்கிரஸ் கடும் வாக்குவாதம்: 40 சதவீத கமிஷன் வாசக முகக்கவசம் அணிந்த உறுப்பினர்கள்-பரபரப்பு..!!
வக்பு வாரிய சொத்து முறைகேடு அறிக்கை தொடர்பாக கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா-காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் 40 சதவீத கமிஷன் வாசகம் அடங்கிய முகக்கவசத்தை உறுப்பினர்கள் அணிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மணிப்பாடி அறிக்கை
கர்நாடக மேல்-சபை நேற்று காலை கூடியதும், எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத், வக்பு வாரிய சொத்துகள் முறைகேடு தொடர்பான அன்வர் மணிப்பாடி அறிக்கை குறித்து பிரச்சினை கிளப்பி பேசினார். அவர் பேசும்போது, “சபையில் அன்வர் மணிப்பாடி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் வக்பு வாரிய சொத்துகளை காங்கிரஸ் தலைவர்கள் முறைகேடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு அதில் உள்ள தகவல்களை ரகசியம் காக்க வேண்டும்.
ஆனால் பா.ஜனதா உறுப்பினர் அதில் இருந்து தகவல்களை முன்கூட்டியே கூறியுள்ளார்” என்றார். அதற்கு சபை தலைவர் ரகுநாத் மல்காபுரே, முதலில் கேள்வி நேரத்திற்கு அனுமதி அளிக்கிறேன். அதன் பிறகு எதிா்க்கட்சி தலைவர் பிரச்சினை கிளப்பலாம் என்று பதிலளித்தார். இதை ஏற்க பி.கே.ஹரிபிரசாத் மறுத்துவிட்டார். மேலும் ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர் போஜேகவுடாவும், எதிர்க்கட்சி தலைவர் கூறிய கருத்து குறித்து சபை தலைவர் தனது முடிவை அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.
40 சதவீத கமிஷன்
அப்போது அவை முன்னவரான மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி, “ஐகோர்ட்டு உத்தரவுப்படி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் முஸ்லிம் ஏழை மக்களுக்கு சேர்ந்த வக்பு வாரிய சொத்துகளை காங்கிரஸ் தலைவர்கள் முறைகேடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார். அப்போது பேசிய சபை தலைவர், இது சிறுபான்மையினர் ஆணைய அறிக்கை என்றார்.
அப்போது ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். PA Janata-Congress heated argumentநேற்று சட்டசபை மற்றும் மேல்-சபை கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் உறுப்பினர்கள், 40 சதவீத கமிஷன் அரசு என்று எழுதப்பட்டு இருந்த வெள்ளை நிற முகக்கவசத்தை அணிந்திருந்தனர். இதற்கு பா.ஜனதா உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனால் சிறுதுநேரம் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.
https://www.dailythanthi.com/News/India/pa-janata-congress-heated-argument-799713