யாழ். போதனா வைத்திய சாலையில் கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் இளைஞன் கைது!! (PHOTOS)
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் கைத்தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் கையடக்க தொலைபேசிகள் தொடர்ந்து திருட்டு போயுள்ளன.
அவை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சிலர் முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 21 வயதான இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன் போது குறித்த இளைஞனிடம் இருந்து 21 கையடக்க தொலைபேசிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த தொலைபேசிகள் வைத்திய சாலையில் திருடப்பட்டவை எனவும் , வைத்திய சாலையில் தொலைபேசிகளை திருட்டுக்கொடுத்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு வந்து தொலைபேசிகளை அடையாளம் காண முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.