பலஸ்தீன் தூதுவரை சந்தித்தார் அலி சப்ரி!!
வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி இன்று (30) இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச் சைத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இரு தரப்பினரின் பரஸ்பர நலன்கள் தொடர்பிலும், இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான பல தசாப்த கால நட்புறவு குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இலங்கை பலஸ்தீன மக்கள் மீது கொண்டுள்ள பற்று மற்றும் நெருக்கடி நிலைமைகளில் ஆதரவளிக்கும் நகர்வுகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.