ஐஓசியும் விலைகளை குறைக்க தீர்மானம்!!
இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் விலையை குறைக்க இலங்கை பெட்ரொலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ள நிலையில் லங்கா ஐஓசியும் நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையைக் குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்துக்கு அமைய ஐஓசி நிறுவனமும் விலைகளை திருத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 92 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 40 ரூபாயாலும் 95 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 30 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளது.
450 ரூபாயாக இருந்த 92 ரக பெட்ரோல் 410 ரூபாயாகவும் 541 ரூபாயாக இருந்த 92 ரக பெட்ரோல் 510 ரூபாயாகவும் குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.