ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும்- மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை..!!
பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் சில வேட்பாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு வருகிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஒரு தொகுதியில் பதவியை ராஜினாமா செய்வார்கள். அதனால் அந்த தொகுதியில் மறு தேர்தல் நடத்தப்படும் சூழல் உண்டாகிறது. இதற்கிடையே தேர்தல் விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வர தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. இலவச அறிவிப்பு, தேர்தல் விதிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் வகையில் உரிய மாற்றங்களை கொண்டு வர தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளது. இது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவும் பரிந்துரை செய்துள்ளது. ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதால் மறு தேர்தலில் அதிக செலவு ஏற்படுவதால் இந்த மாற்றத்தை கொண்டு வர தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் வகையில் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறை வேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.