மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம்..!!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி மழை பெய்தது. இதன்பின் மும்பையில் மழை பெய்யாமல் வறண்ட வானிலை நிலவி வந்தது. இதற்கிடையே, நேற்று முன்தினம் மும்பையில் மதியம் முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் மழை பெய்தது. இடைவிடாமல் பெய்த மழையின் காரணமாக நகரின் சில பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது. இந்த மழையின் காரணமாக மின்சாரம், பஸ் போக்குவரத்து மற்றும் ரெயில்வேயில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. வழக்கம் போல் இயக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த 2 தினங்களுக்கு மும்பை உள்பட தானே, பால்கர் மற்றும் கொங்கண் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வரையில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை பாதிப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.