;
Athirady Tamil News

நிதிஷ் குமாருக்கு வயோதிகம், பிரச்சினையாகி இருக்கிறது: பிரசாந்த் கிஷோர் சாடல்..!!

0

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாருக்கும், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே நல்லுறவு நிலவிய காலம் என்று ஒன்று உண்டு. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய துணைத்தலைவர் என்ற நிலைக்கெல்லாம் பிரசாந்த் கிஷார் உயர்ந்தார். ஆனால் அதன் பின்னர் ‘ஒரே உறையில் இரு வாள்’ பிரச்சினை வெடித்தது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வளர்ந்தன. அதன் விளைவாக பிரசாந்த் கிஷோர் அந்தக் கட்சியில் இருந்து வெளியேறி விட்டார். தற்போது பிரசாந்த் கிஷோர், நிதிஷ் குமார் அரசை விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் சில தின
ங்களுக்கு முன்பு நிதிஷ்குமார், பிரசாந்த் கிஷோர் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தார். அதாவது அவர், “பிரசாந்த் கிஷோர் பா.ஜ.க.வுக்காக வேலை செய்து வருகிறார், ஒரு கால கட்டத்தில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை காங்கிரசில் இணைத்து விடுமாறு எனக்கு அவர் ஆலோசனை வழங்கினார்” என்ற தகவலை வெளியிட்டார். இது பீகார் அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது பீகாரில் 3,500 கி.மீ. தொலைவிலான பாதயாத்திரையை தொடங்கி உள்ள பிரசாந்த் கிஷோர், நிதிஷ் குமாருக்கு பதிலடி கொடுத்து, ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-
நிதிஷ் குமாருக்கு (வயது 71) வயோதிகம் ஒரு பிரச்சினையாகி வருகிறது. அவர் மாயையில் சிக்கி இருப்பதாக தோன்றுகிறது. ஒன்றைச் சொல்லிவிட்டு, அவர் முடிக்கும்போது தொடர்பே இல்லாத வேறொன்றுக்கு தாவி விடுகிறார். நான் பா.ஜ.க.வுக்கு வேலை செய்வதாக அவர் நம்புகிறார் என்றால், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று நான் அவருக்கு எதற்காக நான் ஆலோசனை கூறப்போகிறேன்? நிதிஷ் குமார் அர்த்தமற்று பேசி வருகிறார். ‘டெல்யூஷனல்’ (மாயை) என்ற ஆங்கில வார்த்தை, நிதிஷ்குமாருக்கு சரியாக பொருந்துகிறது. அரசியலில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார். அவர் யாரை நம்பவில்லையோ, அவர்களைத்தான் சூழ்ந்து இருக்கிறார். இது அவருக்கு பயத்தை தருகிறது. அந்த நடுக்கத்தில்தான் அவர் அர்த்தமற்று பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.