சத்தீஸ்கர் காங்கிரஸ் பிரமுகர் 2 பெண் மாவோயிஸ்டுகளுடன் கைது..!!
சத்தீஸ்கர் மாநிலம் போபால்பட்டினம் தொகுதி காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.ஜி.சத்யம் 2 பெண் மாவோயிஸ்டுகளுடன் தெலுங்கானாவில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதாரங்களின்படி, மாவோஸ்டுகளுக்கு உதவியதாக சத்தீஸ்கர் போபால்பட்டினம் தொகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளரும் மூத்த தலைவருமான கே.ஜி.சத்யத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிகிச்சைக்காக பெண் மாவோயிஸ்டுகளுடன் கே.ஜி.சத்யம் தெலுங்கானா சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் மருத்துவமனை செல்வதற்கு முன்பே ஹனமகொண்டா அருகே அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டது குறித்தும், மேலும் எத்தனை பேருக்கு மாவோஸ்டுகளுடன் தொடர்பு உள்ளது என்பதை அம்பலப்படுத்த விசாரணை நடத்தக்கோரியும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு பா.ஜ.க மாநில தலைவர் அருண் சாவ் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் பிரமுகர் தனஞ்சய் சிங் தாக்கூர் கூறுகையில்:- சத்யம் குடும்பத்தினர் 4 நாட்களுக்கு முன்பு அவர் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். சிகிச்சைக்காக தெலுங்கானாவுக்கு வந்த அவரை மாவோயிஸ்டுகள் காருடன் கடத்தி சென்றனர், விக்ரம் உசெந்தி மற்றும் லதா உசெந்தியின் இல்லத்தில் மாவோயிஸ்டு இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க. ஏன் பதிலளிக்கவில்லை என்று தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் பிரமுகர் மாவோயிஸ்டுகளுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.