;
Athirady Tamil News

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி மானியம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

0

கடந்த 2020 ஜுன் மாதத்திலிருந்து, 2022 ஜூன் மாதம் வரையிலான கால கட்டத்தில் சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை சுமார் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த அளவுக்கு இந்த விலை உயர்வு இந்திய வாடிக்கையாளர்களுக்கு உயர்த்தப்படவில்லை. இந்த காலத்தில் 72 சதவீதம் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய எண்ணெய்க் கழகம் (ஐஓசிஎல்), பாரத பெட்ரோலியக் கழகம் (பிபிசிஎல்), இந்துஸ்தான் பெட்ரோலியக் கழகம் (ஹெச்பிசிஎல்) ஆகியவற்றுக்கு ரூ.22,000 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கோரிக்கையை அடுத்து, இந்த ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கி உள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு விநியோகம் தடைபடாமல் நடப்பதை உறுதி செய்வது மற்றும் தற்சார்பு இந்தியா திட்டத்திற்கான உறுதிப்பாட்டை தொடர்வது ஆகியவற்றிற்காக பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.