திருப்பூரில் ரூ.50கோடியில் கட்டப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் மண்ணுக்குள் புதையும் அபாயம்..!!
திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் குளம் எதிரே ரூ. 50 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது. சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். சின்ன ஆண்டிபாளையம் குளம் அருகில் உள்ள சின்ன குளத்தில் நீர் ஆதார பகுதியில் கட்டக்கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி கட்டிட பணிகள் தொடர்ந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக திருப்பூரில் பெய்த தொடர் மழை காரணமாக சுத்திகரிப்பு நிலைய கட்டுமான இடங்களை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் கட்டிடம் மண்ணுக்குள் புதையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள புதிய கட்டுமான கட்டிடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த பகுதியில் செல்ல தடை விதிக்கப்பட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ரூ.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் மழைநீர் சூழ்ந்து மண்ணுக்குள் புதையும் அபாயம் ஏற்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.