1987 ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையினரால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல்!! (படங்கள்)
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையினரால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
யாழ்.கோண்டாவில் கலைவானி வீதிப் பகுதியிலுள்ள அமைந்துள்ள நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாகச் சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செய்யப்பட்டது.
1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில் இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதிகளை ஆக்கிரமித்த இந்தியப் படையினர் விடுதலைப் புலிகளுடன் பல சண்டைக் களங்களைத் திறந்த அதே சமயத்தில் நூற்றுக் கணக்கான அப்பாவிப் பொதுமக்களை ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்ததுடன், பாலியல் பலாத்காரத்தின் பின்னர் பல குடும்பப் பெண்களைப் படுகொலை செய்துமிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”