அகஸ்தியம்பள்ளி- திருத்துறைப்பூண்டி இடையே 22-ந்தேதி அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்..!!
அகஸ்தியம்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே மேம்படுத்தப்பட்ட அகலப்பாதை பிரிவில், அதிவேக சோதனை ஓட்டத்துக்கான கள ஆய்வு வருகிற 22-ந்தேதி பெங்களூரு ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் அபய் குமார் ராய் மேற்பார்வையில் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே மதியம் 1 மணி – 5 மணி வரை அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. எனவே அகஸ்தியம்பள்ளி-திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையங்ளுக்கு இடையே உள்ள ரெயில் தண்டவாளங்களை இந்த குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அணுகவோ, அத்துமீறி நுழையவோ கூடாது என்று தெற்கு ரெயில்வே சார்பாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது.