சுவிஸ் அமரர்.செல்வன் ஜெகீஷன் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
சுவிஸ் அமரர்.செல்வன் ஜெகீஷன் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
முப்பத்தியொராம் நாள் நினைவுடன் விழிநீர் அஞ்சலி
சுவிஸ் ஐ பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஜெகி என அன்புடன் அழைக்கப்படும் அமரர். செல்வன் ஜெகீஷன் ஜெகநாதன்
பிஞ்சுப் பாதங்களால்
நடை பயின்ற பாலகனே
வஞ்சமில்லா நெஞ்சோடு
கொஞ்சி விளையாடியவனே
குறும்புத் தனத்தாலே எமை
குதூகலிக்க வைத்த சிறுமலரே..
கள்ளங் கபடமில்லா எம்
ஆசைக் கண்மணியே
பல்லாண்டு வாழ்ந்து
பலகலைகள் கற்று
பாரினில் வளமோடு
வாழ்வாய் என்று நினைத்திருக்க,
எம் நெஞ்சு வெடிக்க
நினைவுகளைத் தந்துவிட்டு
பாதிவழியில் பயணித்தாயோ
விண்ணுலகம் நோக்கி..
சின்னஞ்சிறு மலராய் சிரித்த
ஜெகீஷா உன்னைத் தன்னருகில்
வைத்திருக்க அழைத்தானோ இறைவன்
உனது அன்பு நினைவுகள்
எங்கள் நெஞ்சங்களிலிருந்து
என்றென்றும் மாறாது, மறையாது
நீ மறைந்து போனாலும் உனது
நினைவுகள் அழிந்து போகாது…
யாழ். தொண்டமானாறு கெருடாவிலைச் சேர்ந்தவரும் சுவிஸ் சூறிச்சில் வாழ்பவரும், சூரிச் அடில்ஷ்வில் முருகன் ஆலயத்தை உருவாக்கியவர்களில் ஒருவரும், சமய, சமூக சேவகருமான ஜெகன்அண்ணர் என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு.திருமதி. ஜெகநாதன் ஜெயகௌரி தம்பதிகளின் மூத்த புதல்வரான ஜெகி என அன்புடன் அழைக்கப்படும் அமரர். செல்வன் ஜெகீஷன் ஜெகநாதன் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவை முன்னிட்டு அன்னாரின் பெற்றோர், அக்கா,அத்தாரான தானி அனுத்திகா, அன்புத்தம்பி அபி எனும் அபிஷாந்த் மற்றும் உற்றார் உறவினர்கள் சார்பாக அன்னாரின் பெற்றோர் வழங்கிய நிதிப் பங்களிப்பில் விசேட அன்னதான நிகழ்வு “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” ஏற்பாட்டில் இன்றையதினம் நடைபெற்றது.
அன்னதான நிகழ்வு பல நூற்றுக்கணக்கான பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து கலந்து கொண்டோரின், அஞ்சலி நிகழ்வுடன் நடைபெற்றது..
மேற்படி நிகழ்வானது, வவுனியா சிவபுரம் ஆரம்பப் பாடசாலை மண்டபத்தில் பல்வேறு கிராம முதியோர், மாணவ மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், தேவையுடையோர் உட்பட பொதுமக்கள் கலந்து கொள்ள, நிகழ்வில் கலந்து கொண்ட அக்கிராம பொதுமக்களுக்கு விசேட சைவ உணவு வழங்கப்பட்டது.
மேற்படி நிகழ்வானது “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி.பவளராணி நவரெத்தினம் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது. நிகழ்வில், “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன், மன்ற முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி.பவளராணி நவரெத்தினம், மற்றும் அக்கிராம பெரியோர்களும் விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
முப்பத்தியொராம் நாள் அந்தியேட்டி நிகழ்வுக்கு பல்வேறு கிராம மக்கள் கலந்து அமரர். செல்வன் ஜெகீஷன் ஜெகநாதன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தீபாரதனை காட்டப்பட்டு தேவார பாராயணம் பாடப்பட்டு அந்தியேட்டிக் கிரியைகள் நிறைவு பெற்றதுடன், கலந்து கொண்ட பொதுமக்களுக்கு விசேட சைவ உணவுகள் வழங்கப்பட்டது.
அமரத்துவமடைந்த அமரர். செல்வன் ஜெகீஷன் ஜெகநாதன் அவர்களுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு, அமரர். செல்வன் ஜெகீஷன் ஜெகநாதன் அவர்களது 31 ஆம் நாள் நினைவாக அனுஸ்டிக்கப்பட்டு, 31 ஆம் நாள் அந்தியேட்டி நிகழ்வுக்கு நிதிப்பங்களிப்பினை வழங்கிய அன்னாரது குடும்பத்தினருக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது மேலான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்,
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
22.10.2022
சுவிஸ் அமரர்.செல்வன் ஜெகீஷன் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos