யாழில். பாவனைக்கு உதவாத புளி; களஞ்சியசாலை முற்றுகை!! (படங்கள்)
யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதியில் மனித பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை பொதியிடப்பட்டுக்கொண்டிருந்த களஞ்சிய சாலை ஒன்று பொது சுகாதார பரிசோதகரால் முற்றுகையிடப்பட்டு 6ஆயிரம் கிலோ பழப்புளி மீட்கப்பட்டுள்ளது.
யாழ்.நகரை அண்டிய பகுதியில் உள்ள களஞ்சிய சாலை ஒன்றில் சுகாதாரமற்ற முறையில் பாவனைக்கு உதவாத பழப்புளி பொதியிட படுவதாக யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகருக்கு இரகசிய தகவல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கிடைக்கப்பெற்றது.
அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொது சுகாதார பரிசோதகர் , பாவனைக்கு உதவாத , சுகாதாரமற்ற முறையில் சேமிக்கப்பட்டு பழப்புளி பொதியிடப்பட்டுக்கொண்டிருந்த 6 ஆயிரம் கிலோ பழப்புளியை மீட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”