கேரளாவின் வயநாடு பகுதியில் கிராமத்திற்குள் மீண்டும் புகுந்த புலி..!!
கேரளாவின் வயநாடு பகுதியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. காடுகளை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமத்திற்குள் அடிக்கடி காட்டு விலங்குகள் நுைழந்து பயிர்களை நாசம் செய்வது உண்டு. மேலும் காட்டு யானை, புலி போன்ற விலங்குகளும் வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வசித்து வந்தனர். கிராமத்திற்குள் வரும் காட்டு யானைகள் வீடுகளை இடித்து, வாகனங்களை சேதப்படுத்துவதும், புலிகள் ஆடு, மாடு போன்ற விலங்குகளை அடித்து கொல்வதும் வாடிக்கையாக நடந்து வந்தது. இந்த நிலையில் சீரல் கிராமத்திற்குள் புகுந்து ஆடுகளை கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். கடந்த சிலநாட்களுக்கு முன்புதான் அந்த புலி, வனத்துறையினர் கையில் சிக்கியது. அதனை பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று வனத்துறையினர் விட்டு வந்தனர். இந்த நிலையில் வயநாட்டின் மீனங்காடி பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்பட்ட 7 ஆடுகள் நேற்று இறந்து கிடந்தது. இந்த ஆடுகளை புலி அடித்து கொன்றுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். சீரல் பகுதியில் புலி பிடிப்பட்ட சிறிது நாட்களிலேயே மீனங்காடியில் மீண்டும் புலி புகுந்து விட்டதாகவும், இதனை வனத்துறையினர் உடனடியாக பிடிக்க வேண்டும் எனவும் இக்கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கிராமத்திற்குள் புலி புகுந்துள்ளதாக வெளியான த கவலை தொடர்ந்து அங்குள்ள தோட்டங்களில் பணிபுரியும் பெண்கள், தொழிலாளிகள் பீதியில் உள்ளனர்.